ரசிகர்கள் முன் மேடையில் கண்ணீர் விட்ட சாய் பல்லவி.. காரணம் இதுதான்!

Sai Pallavi Shyam Singha Roy
By Parthiban.A Dec 21, 2021 06:20 AM GMT
Report

நடிகை சாய் பல்லவி பிரேமம் படம் மூலமாக மலர் டீச்சராக பாப்புலர் ஆனவர். இளசுகளை அதிகம் கவர்ந்த நடிகையாக மாறிய அவருக்கு அதன் பின் தெலுங்கு, தமிழ் சினிமாவிலும் வாய்ப்புகள் குவிந்தது. இரண்டு மொழிகளிலும் அவர் குறிப்பிடத்தக்க படங்களில் நடித்து இருக்கிறார்.

இந்நிலையில் அவர் நானிக்கு ஜோடியாக நடித்து இருக்கும் ஷ்யாம் சிங்கா ராய் படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது. அந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் விழா சமீபத்தில் நடைபெற்றது. அதன் மேடையிலேயே சாய் பல்லவி கண்ணீர் விட்டது பரபரப்பாக பேசப்படுகிறது.

சாய் பல்லவி மேடையில் இருக்கும் போது அரங்கத்தில் இருந்த அவரது ரசிகர்கள் அவரது பெயரை சொல்லி கத்தி இருக்கிறார்கள். அவர் நடித்த படங்களின் கதாபாத்திரங்கள் பெயரை சொல்லியும் அவர்கள் சாய் பல்லவியை எமோஷ்னல் ஆக்கி இருக்கிறார்கள்.

அதன் பின் சாய் பல்லவி மேடையில் பேசும்போது எமோஷ்னலாக கண்கலங்கி பேசினார். ரசிகர்கள் அன்பு தனக்கு கிடைக்க கடவுள் தான் காரணம் என தெரிவித்து கண்கலங்கிய சாய் பல்லவியை நானி தான் ஆறுதல் படுத்தி இருக்கிறார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US