உறவினர் திருமணத்தில் செம குத்தாட்டம் போட்ட நடிகை சாய் பல்லவி- வைரலான வீடியோ
மலரே என தமிழ் சினிமா இளைஞர்களை புலம்ப வைத்தவர் நடிகை சாய் பல்லவி. முதலில் இவர் உங்களில் யார் பிரபுதேவா என்ற நடன நிகழ்ச்சியில் தான் பங்குபெற்றார், பின் தாம் தூம் படத்தில் சின்ன ரோலில் நடித்தார்.
அதன்பிறகு நீண்ட இடைவேளைக்கு பிறகு மலையாளத்தில் பிரேமம் படத்தில் நடித்து பெரிய ரீச் பெற்றார். பிறகு நடிகை சாய் பல்லவியின் வெற்றிப் பாதையை நாம் முழுவதும் பார்த்து தான் வருகிறோம்.
சாய் பல்லவி படங்கள்
சமீபத்தில் நாக சைத்தன்யாவுடன் லவ் ஸ்டோரி, நானியுடன் ஷ்யாம் சிங்கா ராய் போன்ற படங்கள் சாய் பல்லவி திரைப்பயணத்தில் பெரிய வெற்றி படங்களாக அமைந்துள்ளது.
அடுத்து சாய் பல்லவி, ராணாவுடன் நடித்துள்ள விராடா பர்வம் என்ற படம் ஜுலை 1ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. சாய் பல்லவி கமல்ஹாசன் அவர்களின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் நாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ளார்.

வைரலாகும் வீடியோ
இந்த நிலையில் நடிகை சாய் பல்லவி தனது உறவினர் திருமணத்தில் அனைவருடனும் சேர்ந்து குத்தாட்டம் போட்ட வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. இதோ பாருங்கள்,
Aww this One ?❤ @Sai_Pallavi92 #SaiPallavi pic.twitter.com/d8YGtOSEEJ
— Sai Pallavi™ (@SaipallaviFC) May 9, 2022
OTT தளத்தில் வெளியாகப்போகும் Kgf 2 படம்- பெரிய தொகை கொடுத்து வாங்கிய நிறுவனம்