ராஷ்மிகா, சமந்தாவை தொடர்ந்து புஷ்பா 2வில் மற்றொரு முன்னணி நடிகை.. அதுவும் எப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் தெரியுமா
புஷ்பா - The Rule
சுகுமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் புஷ்பா. அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடித்திருந்த இப்படத்தில் ராஷ்மிகா கதாநாயகியாக நடித்திருந்தார்.

சமந்தா இப்படத்தில் இடம்பெற்ற ஸ்பெஷல் பாடலுக்கு நடனம் ஆடி படத்தின் வெற்றிக்கு கூடுதல் பலமாக இருந்தார். முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகம் தற்போது உருவாகி வருகிறது.
இப்படத்திலும் ஒரு ஸ்பெஷல் பாடலுக்கு சமந்தா நடனம் ஆடுவார் என்று கூறப்படுகிறது. மற்றொரு புறம் இப்படத்தில் அவர் கமிட்டாகவில்லை என்றும் கூறுகிறார்கள்.

சாய் பல்லவி
இந்நிலையில் ராஷ்மிகா, சமந்தாவை தொடர்ந்து முன்னணி நடிகை சாய் பல்லவியும் புஷ்பா 2 படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் இடம்பெறும் பழங்குடி பெண் கதாபாத்திரத்தில் சாய் பல்லவியை நடிக்க வைக்க தான் படக்குழு அவரை அணுகியதாகவும் கூறுகின்றனர்.

பொறுத்திருந்து பார்ப்போம் புஷ்பா 2வில் சாய் பல்லவி நடிக்கிறாரா? இல்லையா? என்று..
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
கரூரில் திரைக்கவர்ச்சிக்கு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுவேலையா? சீமான் எதிர்ப்பு IBC Tamilnadu
140 - 145 வேகத்தில் பந்துவீசக்கூடியவர் எங்களிடம் இல்லை: தோல்வி குறித்து இலங்கை கேப்டன் News Lankasri