முதலில் ப்ரேமம் படத்திற்கு நோ சொன்னேன்.. சாய் பல்லவி கூறிய அதிர்ச்சியளிக்கும் காரணம் என்ன தெரியுமா?
ப்ரேமம்
இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ப்ரேமம். மலையாள திரைப்படமான ப்ரேமம் தமிழ் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று இங்கு 250 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது.
இப்படத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி, அனுபமா, மடோனா சபேஸ்டின் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். குறிப்பாக மலர் டீச்சர் கதாபாத்திரம் இந்த படத்தில் மிகவும் பிரபலமானது
அந்த கதாபாத்திரத்தில் நடித்த சாய் பல்லவியும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று முன்னணி நடிகையாகிவிட்டார். தமிழில் இவர் மாரி 2, என்.ஜி.கே ஆகிய படங்களில் நடித்தார்.
சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் தற்போது சிவகார்த்திகேயன் ஜோடியாக அமரன் படத்தில் நடித்துள்ளார்.
இந்த படம் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் புரமோசன் நிகழ்ச்சியில் பேசிய சாய் பல்லவி ப்ரேமம் படம் குறித்து சில தகவலை பகிர்ந்துள்ளார்.
அதிர்ச்சியளிக்கும் காரணம்
அதில், "ப்ரேமம் படத்தில் நடிக்க இயக்குனர் அல்போன்ஸ் புத்திரனிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. நான் அப்போது ஜார்ஜியாவில் மருத்துவம் படித்துக் கொண்டிருந்தேன்.
அந்த அழைப்பு ஒரு மோசடி என்றும் எனக்கு இது போன்று வாய்ப்பு எதுவும் கிடைக்காது என்றும் நினைத்து மறுப்பு தெரிவித்தேன். பின்னர், அது உண்மைதான் என்பதை உணர்ந்து அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்" என்று கூறியுள்ளார்.

40 லட்ச ரூபாய் கடன் வாங்கி அமெரிக்காவுக்குச் சென்ற இந்தியர்: வேலையில்லாமல் திரும்பிய துயரம் News Lankasri
