விஜய், அஜித் படங்களில் நடிக்க மறுத்த சாய் பல்லவி!! எல்லாமே சூப்பர் ஹிட் படங்கள்
சாய் பல்லவி
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் சாய் பல்லவி. இவர் மற்ற நடிகைகள் போல இல்லாமல் அதிகம் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார்.
அவர் நடித்த ஹீரோயின் சென்ரிக் படமான கார்க்கி நல்ல வரவேற்பு பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஹிட் படங்கள்
இந்நிலையில் சாய் பல்லவி, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், அஜித் பட வாய்ப்புக்களை நிராகரித்து இருக்கிறாராம்.
கடந்த 2022 -ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான வலிமை படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாக நடிப்பதாக இருந்ததாம். ஆனால் படத்தில் அவருடைய கதாபாத்திரம் பெரிய வரவேற்பு கிடைக்காது என்ற காரணத்தால் அந்த வாய்ப்பை நிராகரித்துவிட்டாராம்.
அதன் பின் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த வாரிசு படத்தில் ஹீரோயினாக நடிக்க முதல் முதலாக சாய் பல்லவி தான் படக்குழு அணுகியதாம். ஆனால் கதையில் தனக்கு ஆர்வம் இல்லாத காரணத்தால் இந்த படத்தை நிராகரித்து விட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.