விஜய் முதல் மகேஷ் பாபு வரை, முன்னணி நடிகர்களின் படங்களை நிராகரித்த சாய் பல்லவி.. லிஸ்ட் இதோ
சாய் பல்லவி
மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் படத்தில் அறிமுகமாகி, ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவில் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் படங்களில் நடிக்க வாய்ப்பு இவருக்கு வந்தது. சாய் பல்லவி கதாநாயகியாக அறிமுகமாகி 10 ஆண்டுகள் ஆகிவிட்டாலும், அவர் தனக்கு வந்த அனைத்து கதாபாத்திரங்களிலும் நடிக்கவில்லை. மனதிற்கு பிடித்த சில திரைப்படங்களை மட்டுமே நடித்துள்ளார்.
நின்றுபோன நிச்சயதார்த்தம்.. ஆனால், சேரன் வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான்
சாய் பல்லவி நிராகரித்த படங்கள்
கார்கி, அமரன், ஷ்யாம் சிங்க ராய் போன்ற படங்களை இதற்கு உதாரணமாக கூறலாம். இந்த நிலையில், நடிகை சாய் பல்லவி பல திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என நிராகரித்துள்ளார். அது முன்னணி ஹீரோவாக இருந்தாலும் அவர் தனது முடிவை மாற்றிக்கொள்ளாமல் இருந்துள்ளார்.

அப்படி அவர் நிராகரித்த பிரபலமான படங்கள் என்னென்ன என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க.
- தளபதி விஜய்யின் 'லியோ '
- மகேஷ் பாபுவின் 'சர்க்கார் வாரி பாட'
- துல்கர் சல்மானின் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'
- கார்த்தியின் 'காற்று வெளியிடை'
- விஜய் தேவரகொண்டாவின் 'டியர் காம்ரேட்'