வசூலில் தோல்வி! சாய் பல்லவி செய்த செயல்.. அதிர்ச்சி அடைந்த படக்குழு
சாய் பல்லவி
இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ப்ரேமம். இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சாய் பல்லவி.
இவர் தமிழில் தியா படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து தனுஷின் மாரி 2, சூர்யாவின் NGK போன்ற படங்களில் நடித்துள்ளார்.
நடிகை சாய் பல்லவியின் ஹோம்லி லுக் மற்றும் எதார்த்தமான நடிப்புக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. இவர் நடிப்பில் சமீபத்தில் அமரன் திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ஹிந்தியில் ராமாயணம் படத்தில் சீதையாக நடித்து வருகிறார்.
சாய் பல்லவியின் செயல்
இந்நிலையில், சாய் பல்லவி படம் ஒன்றுக்கு சம்பளம் வாங்கவில்லை என்று உங்களுக்கு தெரியுமா. ஆம், முன்பு ஹனு ராகவபுடி இயக்கத்தில் வெளியான 'பாடி பாடி லெச்சே மனசு' என்ற படத்தில் சாய் பல்லவி நடித்துள்ளார்.
ஆனால், அந்த படம் நல்ல வரவேற்பு பெறாமல் வசூலில் தோல்வியடைந்துள்ளது. இதனால் படத்தில் கையெழுத்திடும்போது வாங்கிய தொகையை தவிர பாக்கி பணத்தை சாய் பல்லவி வாங்க மறுத்திருக்கிறார் என கூறப்படுகிறது.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
