பல சர்ச்சைகளுக்கு பின், நடிகை சாய் பல்லவிக்கு கிடைத்த மிகப்பெரும் ஆறுதல்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்
திருமணம் சர்ச்சை
கடந்த சில நாட்களுக்கு முன் நடிகை சாய் பல்லவிக்கும் பிரபல இயக்குனருக்கும் திருமணம் ஆகிவிட்டது என புகைப்படத்தை வைரலாகினார்கள்.
அது உண்மையில்லை, படத்தின் பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படம். இந்த புகைப்படத்தை வைத்து தவறாக பேசாதீர்கள், இது மிகவும் கேவலமான செயல் என கோபத்துடன் பதிவு ஒன்றை சாய் பல்லவி வெளியிட்டு இருந்தார்.
ஆறுதல்
இதன்மூலம் அந்த சர்ச்சைக்கு முற்றுக்குள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், சர்ச்சைக்கு பின் நடிகை சாய் பல்லவிக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் விஷயம் ஒன்று நடந்துள்ளது.
தனுஷ், சாய் பல்லவி இணைந்து நடித்து வெளிவந்த மாரி 2 படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் தற்போது யூட்யூபில் 150 கோடி பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.
தென்னிந்திய அளவில் 150 கோடி பார்வையாளர்களை பெற்ற முதல் பாடல் ரவுடி பேபி தானாம். இதை சாய் பல்லவி மற்றும் தனுஷ் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.
Breaking Records! ? "Rowdy Baby" from #Maari2 has smashed through 1.5 billion views, making it the first South Indian song to achieve this milestone. Join the celebration! ??@dhanushkraja @Sai_Pallavi92 @thisisysr pic.twitter.com/kJ3Qz7N4KH
— Wunderbar Films (@wunderbarfilms) September 24, 2023