தனது வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும்... லிஸ்ட் போட்ட நடிகை சாய் பல்லவி
சாய் பல்லவி
அலட்டிக்கொள்ளாத நடிப்பு, சிம்பிள் லுக் ஆனால் நடனம் என்றால் மாஸ் காட்டும் நாயகி, தமிழை அழகாக உச்சரித்து வசனங்கள் பேசும் ஒரு அம்சமான நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வருபவர் தான் நடிகை சாய் பல்லவி.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என படங்கள் நடித்து வந்தவர் இப்போது பாலிவுட் பக்கமும் சென்றுள்ளார். அங்கு ரூ. 2000 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள ராமாயணா என்ற பிரம்மாண்ட திரைப்படத்தில் சீதாவாக நடித்துள்ளார்.

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இப்படம் வரும் நவம்பர் 5ம் தேதி வெளியாக இருக்கிறது.
எதிர்ப்பார்ப்பு
ராமாயணா பட புரொமோஷனுக்காக ஹிந்தியில் பல ரியாலிட்டி ஷோக்களில் கலந்துகொண்டார்.

அப்போது ஒரு நிகழ்ச்சியில் சாய் பல்லவியிடம் அவரது வருங்கால கணவர் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர், எனது தனிப்பட்ட சுதந்திரத்தையும், தொழிலையும் மதித்து, என்னோட லட்சியங்களை அடையத் துணையாக இருப்பவராக இருக்கணும்.
பெண்கள் பொருளாதார ரீதியாக தங்களது வாழ்க்கையை தாங்களே பார்த்துக்கொள்வது அவசியம்னு நினைக்கிறேன். நல்ல நகைச்சுவை உணர்வும், சமைக்கத் தெரிந்தவருமாக இருக்கணும் என தனது எதிர்ப்பார்ப்பை கூறியுள்ளார்.
