சாய் பல்லவி வீட்டில் திருமண விசேஷம்.. வெளிவந்த நிச்சயதார்த்தம் புகைப்படம்..
சாய் பல்லவி
திரையுலகில் தான் நடித்த முதல் காட்சியில் இருந்து பல லட்சம் ரசிகர்களை தன்வசப்படுத்தியவர் நடிகை சாய் பல்லவி. பிரேமம் படத்தில் மலர் டீச்சராக வந்த சாய் பல்லவி கேரளாவில் மட்டுமல்லாமல் தென்னிந்தியாவில் உள்ள அனைத்து ரசிகர்களின் மனதையும் கொள்ளையடித்தார்.
இதன்பின் தமிழில் தியா படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து மாரி 2, என்.ஜி.கே, கார்கி என நடித்து வருகிறார். மேலும் தற்போது கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்து வரும் திரைப்படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாக நடித்து வருகிறார்.
சாய் பல்லவியின் தங்கை பூஜா
நடிகை சாய் பல்லவிக்கு பூஜா எனும் ஒரு தங்கை இருக்கிறார். இருவரும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருப்பார்கள்.
இவரும் ஒரு நடிகை ஆவார். ஆம், சமுத்திரக்கனி நடிப்பில் வெளிவந்த சித்திரை செவ்வானம் படத்தில் கதையின் நாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பூஜாவின் திருமணம்
பூஜா சமீபத்தில் தனது காதலர் வினீத் என்பவரை அறிமுகம் செய்து வைத்தார். இவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் என தகவல் வெளிவந்த நிலையில், தற்போது நிச்சயதார்த்தம் நடந்துள்ளது என கூறப்படுகிறது. நிச்சயதார்த்தத்திற்கு கையில் மருதாணி போட்டு தயாராகும் பூஜா தனது அக்காவுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
அக்காவான சாய் பல்லவியை இன்னும் திருமணம் செய்துகொள்ளாத நிலையில், தங்கை திருமணத்திற்கு தயாராகிவிட்டார் என்றும் சர்ச்சைக்குரிய விஷயங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், ரசிகர்கள் பலரும், பூஜாவிற்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..
![Gallery](https://cdn.ibcstack.com/article/24d623de-efc5-43af-aa4d-1c42b7a7ac9a/24-65aca1a10329b.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/85942767-eb59-4910-b123-7c31fc0ae99b/24-65aca1a1707f0.webp)
![ரூ.500 கோடி சொத்துக்களை இவர் மீது எழுதி வைத்த ரத்தன் டாடா.., குடும்பத்தினருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி](https://cdn.ibcstack.com/article/a97f3756-140f-4d89-8c0b-25cc64bab4c2/25-67a5e0a7da8d6-sm.webp)
ரூ.500 கோடி சொத்துக்களை இவர் மீது எழுதி வைத்த ரத்தன் டாடா.., குடும்பத்தினருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி News Lankasri
![என்ஜின் வழங்க அமெரிக்க நிறுவனம் உறுதியளித்ததால் தேஜஸ் விமான உற்பத்தியை விரிவுபடுத்த இந்தியா இலக்கு](https://cdn.ibcstack.com/article/4b43851d-4e68-44ab-9f9b-9185768e4a3f/25-67a592984dcbc-sm.webp)
என்ஜின் வழங்க அமெரிக்க நிறுவனம் உறுதியளித்ததால் தேஜஸ் விமான உற்பத்தியை விரிவுபடுத்த இந்தியா இலக்கு News Lankasri
![Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கத்தில் கண்ணீரில் மூழ்கிய யாழ்ப்பாண சிறுமி... காரணம் என்ன?](https://cdn.ibcstack.com/article/1fc81443-4412-4690-92c1-ea36ea8978d0/25-67a62f17584e9-sm.webp)