கதையின் நாயகியாக களமிறங்கும் சாய் பல்லவி.. புதிய திரைப்படத்தின் இயக்குநர் யார் தெரியுமா?

By Karthick Raja Jul 26, 2026 07:40 AM GMT
Report

கதையின் நாயகி

கதாநாயகன் திரைப்படம் மட்டும் தான் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைக்கும் என்கிற காலம் மலையேறிப்போய், கதாநாயகிகளின் திரைப்படங்களும் வசூல் வேட்டையாடி வருகின்றன.

கதையின் நாயகியாக களமிறங்கும் சாய் பல்லவி.. புதிய திரைப்படத்தின் இயக்குநர் யார் தெரியுமா? | Sai Pallavi Solo Heroine New Movie Update

சமீபத்தில் முன்னணி நடிகை சமந்தா நடிப்பில் வெளியான மா இண்டி பங்காரம் திரைப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து, பாக்ஸ் ஆபிஸில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் ஆனது. மேலும் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா மந்தனா, சாய் பல்லவி என பல முன்னணி கதாநாயகிகள் இதுபோன்ற திரைப்படங்களில் தொடர்ந்து கதையின் நாயகிகளாக நடித்து வருகிறார்கள்.

சாய் பல்லவி

இந்த நிலையில், நடிகை சாய் பல்லவி அடுத்ததாக கதையின் நாயகியாக நடிக்கவிருக்கும் புதிய திரைப்படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் மிகவும் பிரபலமான இயக்குநர்களில் ஒருவரான கிஷோர் திருமலா, அடுத்ததாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையை இயக்க திட்டமிட்டுள்ளாராம்.

கதையின் நாயகியாக களமிறங்கும் சாய் பல்லவி.. புதிய திரைப்படத்தின் இயக்குநர் யார் தெரியுமா? | Sai Pallavi Solo Heroine New Movie Update

நடிகர் பாலகிருஷ்ணாவிற்கு 3 மணி நேரமாக நடந்த அறுவை சிகிச்சை.. இப்போது எப்படி இருக்கிறார்

நடிகர் பாலகிருஷ்ணாவிற்கு 3 மணி நேரமாக நடந்த அறுவை சிகிச்சை.. இப்போது எப்படி இருக்கிறார்

பக்தி மற்றும் இதிகாச கூறுகள் கொண்ட கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில் சாய் பல்லவியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், கதையை கேட்டுவிட்டு சாய் பல்லவி நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கதையின் நாயகியாக களமிறங்கும் சாய் பல்லவி.. புதிய திரைப்படத்தின் இயக்குநர் யார் தெரியுமா? | Sai Pallavi Solo Heroine New Movie Update

எப்போதும் வலுவான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகைகளில் ஒருவர் சாய் பல்லவி. இவர் நடிப்பில் தமிழில் வெளிவந்த கார்கி திரைப்படமே இதற்கு முக்கிய உதாரணமாக விளங்கும். மேலும், இவர் நடிப்பில் தற்போது ராமாயணா, ஓம் திரைப்படங்கள் உருவாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US