கதையின் நாயகியாக களமிறங்கும் சாய் பல்லவி.. புதிய திரைப்படத்தின் இயக்குநர் யார் தெரியுமா?
கதையின் நாயகி
கதாநாயகன் திரைப்படம் மட்டும் தான் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைக்கும் என்கிற காலம் மலையேறிப்போய், கதாநாயகிகளின் திரைப்படங்களும் வசூல் வேட்டையாடி வருகின்றன.

சமீபத்தில் முன்னணி நடிகை சமந்தா நடிப்பில் வெளியான மா இண்டி பங்காரம் திரைப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து, பாக்ஸ் ஆபிஸில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் ஆனது. மேலும் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா மந்தனா, சாய் பல்லவி என பல முன்னணி கதாநாயகிகள் இதுபோன்ற திரைப்படங்களில் தொடர்ந்து கதையின் நாயகிகளாக நடித்து வருகிறார்கள்.
சாய் பல்லவி
இந்த நிலையில், நடிகை சாய் பல்லவி அடுத்ததாக கதையின் நாயகியாக நடிக்கவிருக்கும் புதிய திரைப்படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் மிகவும் பிரபலமான இயக்குநர்களில் ஒருவரான கிஷோர் திருமலா, அடுத்ததாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையை இயக்க திட்டமிட்டுள்ளாராம்.

பக்தி மற்றும் இதிகாச கூறுகள் கொண்ட கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில் சாய் பல்லவியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், கதையை கேட்டுவிட்டு சாய் பல்லவி நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

எப்போதும் வலுவான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகைகளில் ஒருவர் சாய் பல்லவி. இவர் நடிப்பில் தமிழில் வெளிவந்த கார்கி திரைப்படமே இதற்கு முக்கிய உதாரணமாக விளங்கும். மேலும், இவர் நடிப்பில் தற்போது ராமாயணா, ஓம் திரைப்படங்கள் உருவாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்வு சீர்திருத்தங்களுக்கு நந்தன் நிலேகனி தலைமையில் உயர்மட்டக் குழு: பிரதமர் மோடி அறிவிப்பு IBC Tamilnadu
சீனாவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து... லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம் News Lankasri