நடிகை சாய் பல்லவியின் பாடல்கள் செய்த சாதனை - என்னென்ன தெரியுமா
ஏ.எல். விஜய் இயக்கத்தில் தமிழில் வெளியான தியா எனும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார்.
தொடர்ந்து தனுஷுடன் மாரி 2, சூர்யாவுடன் என்.ஜி.கே என முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார்.
இவர், நாக சைதன்யாவுக்கு ஜோடியாக லவ் ஸ்டோரி, நடிகர் ராணாவுடன் விராட பருவம் போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார்.
நடிப்பை போலவே நடனத்திலும் சிறந்து விளங்கி வருகிறார் சாய் பல்லவி. இவரது நடனத்திற்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு.
இந்நிலையில், நடிகை சாய் பல்லவி நடித்த படங்களில் இடம்பெற்றுள்ள மூன்று பாடல்கள் யூடியூபில் 200 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.
ஆம் மாரி படத்திலிருந்து ரவுடி பேபி பாடல் 1,150 மில்லியன்,‘பிடா’ எனும் தெலுங்கு படத்தில் இடம்பெற்றுள்ள ‘வச்சிந்தே’ என்ற பாடல் 300 மில்லியன்.
மேலும் ‘லவ் ஸ்டோரி’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘சாரங்க தரியா’ என்ற பாடலும் தற்போது 200 மில்லியன்காலை கடந்து சாதனை செய்துள்ளது.