சாய் பல்லவி பிரம்மாண்ட பாலிவுட் படத்தில் ஒப்பந்தம்! ஹீரோ இவரா
சாய் பல்லவி இதுவரை தென்னிந்திய சினிமாவில் தான் பாப்புலராக இருந்தார். தற்போது அவருக்கு ஹிந்தியிலும் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
அமீர் கான் மகன் ஜோடியாக தற்போது ஒரு ஹிந்தி படத்தில் சாய் பல்லவி நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது இன்னொரு பிரம்மாண்ட ஹிந்தி படம் சாய் பல்லவிக்கு கிடைத்து இருக்கிறது.
சீதையாக சாய் பல்லவி
நிதேஷ் திவாரி இயக்கத்தில் ராமாயணம் படம் அடுத்த வருடம் தொடங்க இருக்கிறது. அந்த படத்தில் ராமர் ரோலில் ரன்பிர் கபூர் மற்றும் சீதையாக சாய் பல்லவி நடிக்கிறார்.
கேஜிஎப் நடிகர் யாஷ் ஒரு முக்கிய ரோலில் இந்த படத்தில் நடிக்க இருக்கிறார். மொத்தம் மூன்று பாகங்களாக படத்தை பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்க இருப்பதாக தெரிவித்து இருக்கின்றனர். ஷூட்டிங் அடுத்த வருடம் 2024 பிப்ரவரியில் தொடங்க இருக்கிறது.