இப்படி இருந்த சாய் பல்லவி இப்போ எப்படி ஆகிட்டாங்க பாருங்க, அசுர வளர்ச்சி
சாய் பல்லவில் தெலுங்கு சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் நாயகியாகிவிட்டார். இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த லவ் ஸ்டோரி படம் மெகா ஹிட் ஆகியுள்ளது.
அதோடு ஹீரோக்களுக்கு நிகராக சாய் பல்லவிக்கு ஆந்திராவில் மன்றங்கள் திறக்க ஆரம்பித்துவிட்டனர், அந்த அளவிற்கு பெரிய மார்க்கெட் வைத்துள்ளார்.
இந்நிலையில் இதே சாய் பல்லவி தெலுங்கு ரியாலிட்டி டான்ஸ் ஷோ ஒன்றில் கலந்துக்கொண்டுள்ளார்.
அந்த சமயத்தில் அந்த நிகழ்ச்சி விளம்பர படங்களில் எல்லாம் நடித்துள்ளார், அந்த சமயத்தில் பல முன்னணி நடிகைகள் சாய் பல்லவிக்கு கமெண்ட் கூறியுள்ளனர்.

ஆனால், இன்று அந்த நடிகைகளை விட உச்சத்தில் இருக்கிறார் சாய் பல்லவி, அதிலும் சமந்தாவே ஒருமுறை சாய் பல்லவி ரியாலிட்டி ஷோவில் ஆடியதை நேரில் கண்டு ரசித்துள்ளார்.
இன்று சாய் பல்லவி கால்ஷிட்டிற்காக ஒட்டு மொத்த தெலுங்கு திரையுலகமும் காத்திருக்கின்றது. இது தானே வளர்ச்சி.