நடிகை சாய் பல்லவியா இது, சிறுவயதில் எவ்வளவு கியூட்டாக உள்ளார் பாருங்க- அவரே வெளியிட்ட போட்டோ
நடிகை சாய் பல்லவி மலரே என்று ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களை கவர்ந்தவர். மலையாள படம் மூலம் நாயகியாக நடிக்க தொடங்கிய அவர் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
அடுத்தடுத்து படங்கள் நடிக்க வேண்டும் என்று கமிட்டாகாமல் கியூட்டான கதாபாத்திரங்களாக தேர்வு செய்து நடித்து வெற்றியும் கண்டு வருகிறார்.
நாக சைத்தன்யாவுடன் இவர் இணைந்து நடித்த லவ் ஸ்டோரி திரைப்படம் வசூலிலும், விமர்சனத்திலும் பட்டய கிளப்பியது.
அதிலும் பாடலில் இடம்பெற்ற பாடல்கள் எல்லாம் பெரிய அளவில் ரசிகர்களிடம் ரீச் ஆனது.
இப்போது நடிகை சாய் பல்லவியின் தங்கையும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார். சித்திரைச் செவ்வானம் என்ற படத்தில் சாய் பல்லவியின் தங்கை நடிக்க படமும் வெளியாகியுள்ளது.
அவருக்கு வாழ்த்து கூற சாய் பல்லவி சிறுவயதில் தங்கையுடன் எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்து வாழ்த்து கூறியுள்ளார்.