விஜய் டிவி நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக சாய் பல்லவி.. பலரும் பார்த்திராத வீடியோ இதோ
சாய் பல்லவி
மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி. முதல் படமே வெற்றி படமாக இவருக்கு அமைந்தது.
இப்படத்தில் மலர் டீச்சர் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். இதன்பின் தமிழில் எண்ட்ரி கொடுத்தார். கதாநாயகியாக மட்டுமின்றி கதையின் நாயகியாக நடித்து அசத்தினார்.
சென்ற ஆண்டு அமரன் எனும் மாபெரும் வெற்றி படத்தை கொடுத்தார். தற்போது சாய் பல்லவி கைவசம் ராமாயணா மற்றும் Ek Din ஆகிய படங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அன்ஸீன் வீடியோ
நடிகை சாய் பல்லவி சின்னத்திரையில் நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். அப்படி அவர் பங்கேற்ற நடன நிகழ்ச்சிகளில் ஒன்று தான் உங்களில் யார் அடுத்த பிரபு தேவா.
இந்த நிகழ்ச்சியில் அவர் செலக்ட் ஆகும்பொழுது எடுக்கப்பட்ட அன்ஸீன் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..
Never underestimate a tv star as (tv moonji will not work in cinema) another solid example is @Sai_Pallavi92#HBDSaiPallavi pic.twitter.com/stZJgcUcLC
— VRsamy (@Veerasamy100) May 9, 2025