நீச்சல் குளத்தில் அவருடன் ஜாலி பண்ணும் நடிகை சாய் பல்லவி... வைரல் போட்டோ
சாய் பல்லவி
அழகென்றால் நீதானா என ரசிகர்கள் புலம்பும் அளவிற்கு ரசிகர்களை அழகால் கட்டிப்போட்டுள்ளவர் நடிகை சாய் பல்லவி.
தமிழ், தெலுங்கு, மலையாளம் படங்களில் நடித்து அசத்தியவர் இப்போது ஹிந்தியிலும் கலக்க தொடங்கியுள்ளார். மருத்துவம் படித்துள்ள இவர் கடந்த 2005ம் ஆண்டு தமிழில் வெளியான கஸ்தூரி மான் படத்தின் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.
அவருக்கு பெரிய ரீச் கொடுத்த படம் என்றால் அது நிவின் பாலியுடன் இணைந்து சாய் பல்லவி நடித்த பிரேமம் படம் தான்.
துல்கர் சல்மானுடன் கலி, தெலுங்கில் பிடா, மிடில் க்ளாஸ் அப்பாயி என தொடர்ந்து ஹிட் படங்கள் நடித்தவர் கடந்த 2018-ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2 படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்தார்.
தொடர்ந்து படங்கள் நடித்துவரும் சாய் பல்லவி நடிப்பில் கடைசியாக வெளியான படம் அமரன், இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகி இருந்தது.
வைரல் போட்டோ
நடிகை சாய் பல்லவி எந்த ஒரு பதிவோ, புகைப்படமோ பதிவிட்டாலும் அது ரசிகர்களிடம் வைரலாகிவிடும். அப்படி தான் சாய் பல்லவி தனது சகோதரி பூஜா கண்ணனுடன் நீச்சல் குளத்தில் எடுத்த புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த போட்டோ,