20 வயதில் கட்சி சேரா பாடல் புகழ் சாய் அபயங்கர் செய்த சாதனை.. என்ன தெரியுமா
சாய் அபயங்கர்
சாய் அபயங்கர் தனது முதல் முயற்சியான 'கட்சி சேரா' மற்றும் 'ஆச கூட' ஆகிய சுயாதீன டிரெண்டிங் பாடல்கள் மூலம் ஒரே இரவில் அனைவரது மனதிலும் இடம்பிடித்தார்.
இப்போது, லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் நடிகர் ராகவா லாரன்ஸ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் 'பென்ஸ்' திரைப்படத்தின் மூலம் திரைப்படத் துறையில் இசையமைப்பாளர் என்ற பயணத்தையும் தொடங்க இருக்கிறார்.
அது மட்டுமின்றி, சூர்யா 45 படத்திலும் இசையமைப்பாளராக கமிட்டாகியுள்ளார். 20 வயது மட்டுமே ஆகும் சாய் அபயங்கர் தற்போது ஒரு சாதனையை படைத்துள்ளார்.
என்ன தெரியுமா
உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் கூகுளில் அதிகமாக தேடப்படும் திரைப்படங்கள், பாடல்கள் உள்ளிட்ட பலவற்றின் பட்டியலை வழக்கமாக கூகுள் நிறுவனம் வெளியிடும்.
அந்த வகையில், தற்போது சாய் பாடிய கட்சி சேரா பாடல் இந்த ஆண்டின் அதிகமாக தேடப்பட்ட பாடல்கள் வரிசையில் சர்வதேச அளவில் முதல் 10 இடத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன் மூலம், ஏஆர் ரஹ்மான் மற்றும் அனிருத் வரிசையில் சாய் அபயங்கரும் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.