சமந்தா - நாக சைதன்யா பிரிவு! இணையத்தில் பரவும் பரபரப்பு தகவல்..

samantha naga chaithanya
By Jeeva Aug 28, 2021 10:50 AM GMT
Report

தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நட்சத்திர ஜோடிகளாக விளங்கும் சமந்தா - நாகசைதன்யாவிற்கு கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணமானது. திருமணத்திற்கு பிறகும் சமந்தா திரைப்படம் மற்றும் சீரிஸ் என நடித்து வருகிறார்.

இதனிடையே சமீபத்தில் சமந்தா தனது சமூக வலைத்தளங்களில் இருந்த சமந்தா அக்கினேனி என்ற பெயரை S என மாற்றி வைத்து கொண்டார். பின் அவர் நடித்து வரும் சாகுந்தலம் என்ற படத்தின் ப்ரமோஷனுக்காக தான் அவர் அப்படி செய்தார் என கூறப்பட்டது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக டோலிவுட் வட்டாரங்களில் சமந்தா - நாகசைதன்யா குறித்த செய்தி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறதாம். மேலும் ஒரு தெலுங்கு சினிமா இணையத்தில் பெரிய இடத்து ஜோடி ஒன்று அதிகாரப்பூர்வமாக பிரிய உள்ளது.

பல கோடி சொத்துக்களை மனைவிக்கு ஜீவனாம்சமாக கணவர் வழங்க இருக்கிறார் என்றும் செய்தி பரவியுள்ளது. அந்த செய்தியை சமந்தா - நாகசைதன்யா பிரிவு குறித்து ஒப்பிட்டு கிசுகிசுக்கப்படுகிறதாம்.

மேலும் இந்த செய்திகள் குறித்து சமந்தா அளித்திருந்த பேட்டி ஒன்றில் சமந்தாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு மறுப்பு தெரிவித்த சமந்தா, இது போன்ற செய்திகள் குறித்து கருத்து தெரிவிக்க நான் விரும்பவில்லை என கூறிவிட்டார். 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US