மன்னிப்பு கேட்ட நடிகர் சித்தார்த்! சாய்னா நேவால் ரியாக்ஷன்
பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் பதிவிட்டு இருந்த ட்விட்டுக்கு பதில் அளித்து இருந்த நடிகர் சித்தார்த் ஆபாசமான ஒரு வார்த்தையை குறிப்பிட்டார் என அவருக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ட்விட்டரை முடக்க வேண்டும் என்றும் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் சித்தார்த் தனது ட்விட்டுக்கு மன்னிப்பு கேட்டிருக்கிறார். தான் ஜோக் என நினைத்து பதிவிட்டது சென்று சேரவில்லை என குறிப்பிட்டு இருக்கிறார் அவர்.
சித்தார்த் மன்னிப்பு அறிக்கை வெளியிட்டு இருப்பதற்கு சாய்னா நேவால் மகிழ்ச்சி தெரிவித்து இருக்கிறார். "அவர் இந்த வார்த்தையை ஒரு பெண்ணிடம் பயன்படுத்தி இருக்க கூடாது. நான் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆவது பார்த்து எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. நான் அவரிடம் எப்போதும் பேசியது இல்லை. கடவுள் அவரை ஆசீர்வதிக்கட்டும்" என சாய்னா தெரிவித்து உள்ளார். +
Dear @NSaina pic.twitter.com/plkqxVKVxY
— Siddharth (@Actor_Siddharth) January 11, 2022