ஜீ.வி.பிரகாஷ் சாருக்கு நன்றி.. சைந்தவி போட்ட பதிவு
இசையமைப்பாளரும் நடிகருமான ஜீ.வி.பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டு 12 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்வதாக அறிவித்தனர்.
கடந்த வருடம் அவர்கள் சட்டப்படி நீதிமன்றம் மூலமாக விவாகரத்து பெற்றுவிட்டனர். அவர்கள் பிரிந்துவிட்டாலும் ஜீ.வி.பிரகாஷ் நடத்தும் இசை கச்சேரிகளில் சைந்தவியும் கலந்துகொண்டு பாடல்கள் பாடி வருகிறார். அது பலரும் ஆச்சர்யம் அளிக்கும் ஒன்றாக இருக்கிறது.

விருது.. ஜீ.வி சாருக்கு நன்றி
இந்நிலையில் அசுரன் படத்தில் வரும் ‘எள்ளு வய பூக்கலையே’ பாடலுக்காக சைந்தவிக்கு மாநில அரசு விருது அறிவித்து இருக்கிறது.
அதற்காக நன்றி தெரிவித்து பதிவிட்டு இருக்கும் சைந்தவி 'என்னை நம்பிய ஜீ.வி.பிரகாஷ் சாருக்கு நன்றி' என குறிப்பிட்டு இருக்கிறார்.
அசுரன் படம் உருவான போது ஜீ.வி மற்றும் சைந்தவி இருவரும் ஒன்றாக தான் வாழ்த்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.