விவாகரத்துக்கு பிறகு ஜீ.வி.பிரகாஷ், சைந்தவி ஒன்றாக செய்யும் விஷயம்! ஆச்சர்யத்தில் ரசிகர்கள்
நடிகரும் இசையமைப்பாளருமான ஜீ.வி.பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் சில மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர்.
கடந்த மே மாதம் இருவரும் விவாகரத்தை அறிவித்தபோது ரசிகர்கள் அனைவரும் ஷாக் ஆனார்கள்.

ஒன்றாக கச்சேரி
இந்நிலையில் சைந்தவி இன்ஸ்டாவில் வெளியிட்டு இருக்கும் ஒரு வீடியோ ரசிகர்கக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அடுத்த மாதம் ஜீ.வி.பிரகாஷ் மலேசியாவில் கச்சேரி நடந்த இருக்கிறார். அதில் சைந்தவியும் பங்கேற்று பாட இருக்கிறாராம்.
அதை வீடியோவில் சைந்தவி கூறி இருக்கிறார். அதில் 'ஜீ.வி.பிரகாஷ் சார்' எனவும் அவர் பேசும்போது குறிப்பிடுகிறார். விவாகரத்து ஆனாலும் அவர்கள் இருவரும் professional ஆக சேர்ந்து இருப்பது பற்றி ரசிகர்களும் ஆச்சர்யமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
வீடியோ இதோ
திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்ட தமிழ்நாடு பட்ஜெட் ஆவணம் - கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம் IBC Tamilnadu
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri