வாய்ப்புக்காக ஓவர் கவர்ச்சி? எல்லாம் இதற்காக தான்.. சாக்ஷி அகர்வால் விளக்கம்
சாக்ஷி அகர்வால்
நடிகை சாக்ஷி அகர்வால் குறைந்த அளவிலான படங்களில் தான் நடித்து இருக்கிறார் என்றாலும், அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிடும் கிளாமர் வீடியோக்கள் மூலமாக தான் அதிகம் பாப்புலர் ஆக இருக்கிறார்.
பிக் பாஸ் ஷோவில் அவர் போட்டியாளராக கலந்துகொண்ட போது அவர் அதிகம் பிரபலம் ஆனாலும், அதிகம் விமர்சனங்களையும் தான் சந்தித்தார்.

கிளாமர் காட்டுவது எதற்காக
பட வாய்ப்பு பெறுவதற்காக தான் சாக்ஷி கிளாமராக போட்டோ மற்றும் வீடியோவெளியிட்டு வருகிறார் என பலரும் விமர்சிக்கப்படும் நிலையில் தற்போது அது பற்றி அவர் விளக்கம் கொடுத்து இருக்கிறது.
பிரபுதேவாவுடன் பகீரா, எஸ்ஏசி இயக்கத்தில் 'நான் கடவுள் இல்லை' படம், கெஸ்ட் என்ற ஹீரோயின் சென்ட்ரிக் படம் உள்ளிட்ட பல படங்கள் கையில் வைத்திருப்பதாக கூறி இருக்கிறார் சாக்ஷி அகர்வால்.
"எனக்கு இன்ஸ்டாகிராமில் அதிகம் followers இருக்கிறார்கள், என்னை பற்றி விமர்சனங்கள் வருகிறது, அதே போல என்னை பிடித்தவர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்காக மட்டுமே நான் bold வீடியோ வெளியிடுகிறேன்" என தெரிவித்து இருக்கிறார்.
நான் வெளியிடும் வீடியோக்களை பார்த்துவிட்டு தான் சில பட வாய்ப்புகள் வந்தது எனவும் சாக்ஷி ஒப்புக்கொண்டிருக்கிறார்.
