புது சைடு பிஸ்னஸ் தொடங்கிய பிக் பாஸ் சாக்ஷி அகர்வால்! எந்த நடிகையும் செய்யாத ஒன்று
நடிகை சாக்ஷி அகர்வால் படங்களில் நடித்து பிரபலமானதை விட பிக் பாஸ் மூலமாக தான் பெரிய அளவில் பிரபலம் அடைந்தார். பல படங்களில் அவர் குணசித்திர ரோல்களில் நடித்து இருந்தாலும் பிக் பாஸ் ஷோ அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது.
இருப்பினும் அந்த ஷோவுக்கு பிறகும் அவருக்கு பெரிய அளவில் படம் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனால் சின்ன படங்களில் அதிகம் நடித்து வருகிறார். தற்போது திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார் அவர்.

புது பிசினஸ்
இந்நிலையில் சாக்ஷி அகர்வால் ஒரு புதிய சைடு பிசினஸ் ஒன்று தொடங்கி இருக்கிறார். எனர்ஜி பார் சாக்லேட் நிறுவனம் ஒன்றை தொடங்கியிருக்கும் அவர் அதன் விளம்பரத்திலும் நடித்து பிரபலப்படுத்தி வருகிறாராம்.
சென்னையில் பல இடங்களில் அதன் பேனர் வைக்கப்பட்டு இருக்கும் நிலையில் அதை நேரில் சென்று பார்வையிடும் லைவ் வீடியோவை சாக்ஷி தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார். இதோ பாருங்க.