சக்திவேல் சீரியல் புகழ் நடிகை அஞ்சலிக்கு அடித்த ஜாக்பாட்.. வாழ்த்து கூறும் ரசிகர்கள்
சக்திவேல்
கடந்த டிசம்பர் 2023ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் புதியதாக தொடங்கப்பட்ட தொடர் தான் சக்திவேல்.
500 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் இந்த சீரியலில் பிரவின் ஆதித்யா மற்றும் அஞ்சலி பாஸ்கர் ஜோடியாக நடிக்கிறார்கள்.
தற்போது கதையில் சிவபதி, தென்னரசு பற்றி தெரிந்துகொண்டு அவரை வீட்டைவிட்டு வெளியே அனுப்புகிறார், இதனால் தனக்கு இனி வேலன் என முடிவு எடுக்கிறார்.
ஆனால் வேலன், சக்திக்கு கொடுத்த நம்பிக்கைக்காக இனி அடிதடியில் இறங்க கூடாது என முடிவு எடுக்க இவரையும் அவரது அப்பா வீட்டைவிட்டு வெளியேற்றுகிறார்.
புதிய தொடர்
தற்போது சக்தியாக நடிக்கும் நடிகை அஞ்சலி மலையாளத்தில் புதிய தொடர் ஒன்று கமிட்டாகியுள்ளார். Krishna Gaadha என பெயரிடப்பட்டுள்ள இந்த தொடரில் அஞ்சலி 2 கதாபாத்திரங்களில் நடிக்கிறாராம்.