அந்த நபர் என்னை தகாத முறையில் தொட்டு.. வேதனையை பகிர்ந்த சக்திவேல் சீரியல் நடிகை அஞ்சலி!!
அஞ்சலி பாஸ்கர்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சக்திவேல் சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் தான் நடிகை அஞ்சலி பாஸ்கர். இவர் இத்தொடரின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

பேட்டி
அண்மையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பேசிய அஞ்சலி, தனக்கு நடந்த கசப்பான அனுபவத்தை பற்றி பேசியுள்ளார். அதில் கூறுகையில், பெண்கள் பேருந்தில் செல்லும் போது சிலர் தவறாக பார்ப்பர் மற்றும் பாலியல் சீண்டலில் ஈடுபடுபவர்கள். நான் கஷ்டப்படும் குடும்பத்தில் இருந்து வந்ததால் பேருந்தில் தான் செல்வேன்.
நான் பேருந்தில் சென்று கொண்டு இருந்த சமயத்தில் ஒரு நடுத்தர வயது நபர் என்னிடம் தகாத முறையில் உரசினார். அந்த நபருக்கு கு ஓங்கி ஒரு குத்துவிட்டு திட்டினேன். பின் அந்த நபர் இறங்கி சென்றுவிட்டார். அப்போது அந்த பேருந்தில் இருந்த ஒரு பெண் கூட எனக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை என்று அஞ்சலி கூறியுள்ளார்.
