சக்திவேல் சீரியலில் முக்கிய நாயகியாக நடித்த சந்தியாவின் சீமந்த புகைப்படங்கள்
நடிகை சந்தியா
கண்மணி சீரியலில் தனக்கு கிடைத்த முதல் சீரியலில் நடித்து மக்களின் கவனத்தை பெற்றவர் தான் அவள் சந்தியா.
அதன்பின் சத்யா, சுந்தரி நீயும் சுந்தரன் நானும், நம்ம வீட்டுப் பொண்ணு போன்ற தொடர்களில் நடித்து வந்தார். பின் அவருக்கு நல்ல ரீச் கொடுத்த தொடர் என்றால் அது விஜய் டிவியில் ஒளிபரப்பான சக்திவேல் சீரியல் தான்.
சீரியலை தாண்டி தனது பட்டிமன்ற பேச்சால் பலரையும் கவனிக்க வைத்தவர். ஆதித்யா டிவியில் காலேஜ டாட் காம் போன்ற நிகழ்ச்சிகளையும் இவர் தொகுத்து வழங்கி இருக்கிறார்.

சீமந்தம்
அவள் சந்தியாவிற்கு முரளி கிருஷ்ணன் என்பவருடன் திருமணம் நடந்து முடிந்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன் கர்ப்பமாக இருப்பதை சந்தியா அறிவிக்க தற்போது அவருக்கு கோலாகலமாக சீமந்தம் நடந்து முடிந்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ, புகைப்படங்களை அவரே வெளியிட்டுள்ளார்.