சலார் மோசமான வசூல்.. புஷ்பா 2க்கு வந்த பெரிய பாதிப்பு!
தெலுங்கு சினிமாவில் அதிகம் பான் இந்தியா படங்கள் வந்து கொண்டிருக்கிறது. அதனால் சமீபத்தில் ரிலீஸ் ஆன சலார் படத்தின் மீதும் ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
இந்த படம் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ஓரளவு நல்ல வசூல் குவித்தாலும் தமிழ், கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் மோசமாகவே வசூல் வந்திருக்கிறது.
ஹிந்தியில் மட்டுமே 100 கோடி வசூலித்து இருக்கிறது இந்த படம் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அது கேஜிஎப் 2 வசூலை நெருங்க கூட முடியவில்லை. ஷாருக் கானின் Dunki படத்துடன் மோதியதால் சலார் பெரிய பாதிப்பை சந்தித்து இருக்கிறது.
இருப்பினும் சலார் படத்தை பெரிய வெற்றி ஆக்கிய ரசிகர்களுக்கு நன்றி என பிரபாஸ் புத்தாண்டு வாழ்த்து பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார்.
புஷ்பா 2க்கு வந்த பாதிப்பு
சலார் படம் அமெரிக்காவில் 8.2 மில்லியன் டாலர்கள் வசூலித்து இருக்கிறது. இந்திய ருபாய் மதிப்பில் அது 68 கோடி ரூபாய் ஆகும்.
அடுத்து அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படத்தின் அமெரிக்க உரிமையை 100 கோடி ரூபாய்க்கு விற்க தயாரிப்பாளர் முயற்சித்து வருகிறார்.
ஆனால் சலார் படம் வசூல் மிக குறைவாக வந்திருப்பதால், அடுத்து வரும் புஷ்பா 2 படத்திற்கு 50 கோடி மட்டுமே தர முடியும் என விநியோகஸ்தர்கள் கூறுகிறார்களாம். இதனால் புஷ்பா 2 படத்திற்கும் தற்போது சிக்கல் வந்திருக்கிறது.