சலார் படத்தின் முதல் நாள் ப்ரீ புக்கிங் வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் வேட்டையில் பிரபாஸ்
பிரபாஸ் - சலார்
பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த கடந்த மூன்று படங்களும் பெரிதளவில் வெற்றிபெறவில்லை. இதனால் அவருடைய ரசிகர்களும் சற்று வருத்தத்தில் இருந்தனர்.
பாகுபலி படத்திற்கு பின் வெற்றியே கிடைக்காத நிலையில் சலார் திரைப்படம் கண்டிப்பாக பிரபாஸுக்கு மாபெரும் வெற்றியை மக்களிடம் இருந்து பெற்று தரும் என எதிர்பார்க்கப்பட்டது.

இன்று உலகளவில் வெளிவந்துள்ள சலார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. விமர்சன ரீதியாகவும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பை கிடைத்துள்ளதாம்.
பாக்ஸ் ஆபிஸ் வசூல் வேட்டை
இந்நிலையில், சலார் படத்தின் முதல் நாள் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் முதல் நாள் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே ரூ. 80 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

பிரஷாந்த் நீல் - பிரபாஸ் கூட்டணியில் உருவான இப்படம் கண்டிப்பாக ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து புதிய வசூல் சாதனைகளை இந்திய சினிமாவில் படைக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri