இந்திய திரையுலகமே எதிர்பார்க்கும் சலார் திரைப்படத்தின் புதிய போஸ்டர்! வில்லனாக மிரட்டும் பிரித்விராஜ்
பிரபாஸ்
இன்று பான் இந்தியன் நடிகராக பார்க்கப்படுபவர் நடிகர் பிரபாஸ், பாகுபலி திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு இவரின் திரைப்படங்கள் அனைத்து மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகி வருகிறது.
அந்த வகையில் கடைசியாக வெளியான ராதே ஷ்யாம் திரைப்படமும் பான் இந்திய டப் செய்யப்பட்டு வெளியானது. ஆனால் அப்படம் எதிர்பார்த்த பெரிய வெற்றியை அடையவில்லை. அப்படத்தை அவரின் அதிபுருஷ் திரைப்படமும் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது.

சலார்
இந்நிலையில் பிரபாஸின் லைன் அப்-ல் அனைவரலாலும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் சலார். கே.ஜி.எப் திரைப்படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் இப்படத்தை இயக்கி வருவதால் அனைவரும் இப்படத்தை எதிர்பார்த்து இருக்கின்றனர்.
மேலும் தற்போது சலார் திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகியிருக்கிறது. இன்று நடிகர் பிரித்விராஜின் பிறந்தநாள் என்பதால் அப்படத்தில் வில்லனாக நடித்துள்ள அவரின் போஸ்டரை வெளியிட்டு இருக்கின்றனர்.

நீயா நானா கோபிநாத்தின் தாய், தந்தையை பார்த்துள்ளீர்களா.. அழகிய குடும்ப புகைப்படம்