வசூலில் லியோ படத்தை ஓரங்கட்டிய சலார்.. முதல் நாளே இத்தனை கோடியா?.அதிகாரபூர்வ அறிவிப்பு..
பிரபாஸ்
கே.ஜி.எஃப் பட இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவான சலார் திரைப்படம் பிரமாண்டமாக உலக அளவில் நேற்று வெளியானது.
இப்படத்தில் பிருத்விராஜ், ஸ்ருதி ஹாசன், ஜகபதி பாபு, ஈஸ்வரி ராவ், பாபி சிம்ஹா, மைம் கோபி, ஸ்ரேயா ரெட்டி என நட்சத்திர பட்டாளமே நடித்து உள்ளனர்.
தற்போது சலார் படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனம் கொடுத்தாலும் வசூல் ரீதியாக பட்டையை கிளப்பி வருகிறது.

சலார் vs லியோ
தற்போது இப்படம் முதல் நாள் மட்டும் ரூபாய் 178.7 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரபூர்வமாக படக்குழு அறிவித்து உள்ளது.
விஜய்யின் லியோ படம் முதல் நாளே ரூபாய் 148 கோடி வசூல் செய்து தென்னிந்தியாவின் நம்பர் ஒன் பாக்ஸ் ஆபிஸ் மன்னனாக இருந்த நிலையில், தற்போது பிரபாஸின் சலார் படம் அந்த சாதனையை முறியடித்துள்ளது.

128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri