சலார் 2 பற்றி வந்த அப்டேட்.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
பிரபாஸ், பிரித்விராஜ், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டப் பலர் நடித்து இருந்த சலார் படம் கடந்த வருடம் டிசம்பர் 22ம் தேதி ரிலீஸ் ஆகி இருந்தது. பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் படம் வெளியானாலும் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை.
இருப்பினும் 700 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது இந்த படம். முன்பு அறிவித்தது போலவே சலார் இரண்டாம் பாகம் வருமா என்பதும் கேள்விக்குறியாகவே இருந்து வந்தது. அது டிராப் ஆகவும் வாய்ப்பிருக்கிறது என செய்தி பரவியது.
சலார் 2 ஷூட்டிங்
சலார் 2 படத்தின் ஷூட்டிங் வரும் ஏப்ரல் மாதம் தொடங்க இருக்கிறதாம். சலார் படத்தில் நடித்து இருந்த பாபி சிம்ஹா தான் இந்த தகவலை வெளியிட்டு இருக்கிறார்.
ஏற்கனவே இரண்டாம் பாகத்திற்கான 40% ஷூட்டிங்கை இயக்குனர் பிரஷாந்த் நீல் முடித்துவிட்டார். அதனால் ஷூட்டிங் செய்யப்பட வேண்டியது குறைந்த அளவு தான் இருக்கிறதாம்.

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri
