ப்ரீ புக்கிங்கில் வசூல் சாதனை படைக்கும் சலார்.. ரிலீஸுக்கு 5 நாட்களுக்கு முன்பே இப்படியா
சலார்
பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் Pan இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ளது சலார். கடந்த வாரம் தான் இப்படத்தின் டிரைலர் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தில் பிரபாஸ் உடன் இணைந்து பிரித்விராஜ், சிரேயா ரெட்டி, ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
வருகிற டிசம்பர் 22ஆம் தேதி உலகளவில் வெளிவரவுள்ள இப்படத்தின் மீது மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் எதிர்பார்ப்பை வைத்துள்ளனர். அந்த எதிர்பார்ப்பை முழுமையாக சலார் பூர்த்தி செய்கிறதா என பொறுத்திருந்து பார்ப்போம்.
ப்ரீ புக்கிங்
இந்நிலையில், இப்படம் வெளிவர இன்னும் 5 நாட்கள் இருக்கும் நிலையில் இதுவரையிலான ப்ரீ புக்கிங் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படம் உலகளவில் ப்ரீ புக்கிங்கில் ரூ. 12 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது.