வசூலை வாரிக்குவிக்கும் சலார்.. இரண்டு நாட்களில் எவ்வளவு தெரியுமா
சலார்
பிரபாஸ் நடிப்பில் அதிக எதிர்பார்ப்பில் வெளிவந்த திரைப்படம் சலார். இப்படத்தை பிரஷாந்த் நீல் இயக்கியிருந்தார்.
கே.ஜி.எப் 1, 2 படங்களை இயக்கிய நம் மனதில் இடம்பிடித்த பிரஷாந்த் நீல் கண்டிப்பாக சலார் படத்தை செம மாஸாக எடுத்திருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது அப்படியே தலைகீழாக மாறிவிட்டது.
பிரபாஸுக்கு நல்ல ஹீரோயிசம் கொடுத்த அளவிற்கு கதை வலுவாக இல்லை. சுருக்கமாக சொல்லப்போனால் கே.ஜி.எப் போல் இல்லை என ரசிகர்கள் தங்களுடைய விமர்சனங்களை வைத்தனர்.
இரண்டு நாள் வசூல்
ஒரு பக்கம் கடுமையான விமர்சனங்கள் இருக்கும் பட்சத்தில் பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரிக்குவித்து வருகிறது சலார்.
ஆம், முதல் நாளே உலகளவில் ரூ. 178 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்த இப்படம் இரண்டு நாட்களில் உலகளவில் ரூ. 295 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இரண்டே நாட்களில் ரூ. 250 கோடி மயில்கல்லை கடந்து மாபெரும் சாதனையை சலார் படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
