பிரம்மாண்டத்தின் உச்சம் வாரணாசி படத்திற்காக எஸ்.எஸ்.ராஜமௌலி வாங்கும் சம்பளம்... இத்தனை கோடியா, அடேங்கப்பா
வாரணாசி
தமிழ் சினிமாவில் பிரம்மாண்டத்தின் உச்சமாக படங்கள் இயக்குவதில் பெயர் போனவர் ஷங்கர்.
அதேபோல் தெலுங்கு சினிமாவில் இந்திய சினிமா மக்களை கவரும் வண்ணம் படங்கள் இயக்கி கலக்குபவர் தான் எஸ்.எஸ்.ராஜமௌலி. பாகுபலி படத்தில் இருந்தே இவரது படைப்புகள் மக்களிடம் அதிக கவனம் பெற்று வருகிறது.
திருமண நாளில் புதிய கார் வாங்கியுள்ள நடிகரும், பிக்பாஸ் பிரபலமுமான கணேஷ் வெங்கட்ராமன்... புகைப்படங்கள் இதோ
பாகுபலி படங்களுக்கு பிறகு தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்கள் ராம் சரண் மற்றும் ஜுனியர் என்டிஆரை வைத்து ஆர்ஆர்ஆர் படம் இயக்கினார், அப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு ஆஸ்கர் விருது எல்லாம் பெற்றார்.

சம்பளம்
அந்த படத்தை தொடர்ந்து எஸ்.எஸ்.ராஜமௌலி, முன்னணி நாயகன் மகேஷ் பாபுவை வைத்து வாரணாசி என்ற படத்தை இயக்கியுள்ளார்.

சுமார் ரூ. 1500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்திற்காக ராஜமௌவி கடின உழைப்பை போட்டு வருகிறார். இப்பட டைட்டில் டீஸர், பெயர் வெளியீடே பிரம்மாண்டமாக இருந்தது, ரசிகர்களை பிரம்மிக்க வைத்தது.
இந்த படத்தின் இயக்குனரான ராஜமௌலி சம்பளத்திற்குப் பதிலாக படத்தின் மொத்த லாபத்தில் பங்கு பெறுகிறார் என்கின்றனர். இந்தப் பங்கு பல நூறு கோடிகளைத் தொடலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பிரித்தானியாவில் பிறந்த பிள்ளைகளும் நாடுகடத்தப்படலாம்: அடிமடியில் கை வைக்கும் உள்துறைச் செயலரின் திட்டம் News Lankasri