கோடிகளில் சம்பளம் வாங்கும் லோகேஷ் கனகராஜ்.. முதல் படத்தில் வாங்கிய சம்பளம் இவ்வளவு தானா?
கோலிவுட் சினிமாவின் முன்னனி இயக்குனராக இருக்கும் லோகேஷ் கனகராஜ் அண்மையில் தனது முதல் படத்தின் சம்பளத்தை பற்றி கூறியுள்ளார்.
"மாநகரம்" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த லோகேஷ். சமீபத்தில் இவர் இயக்கிய "விக்ரம்" படத்தின் வெற்றியினால் இவரது இயக்கத்தில் நடிக்க முன்னனி நடிகர்கள் ஆவலாக உள்ளனர்.
லோகேஷ், தளபதி கூட்டணி
தளபதி விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இவர்களின் கூட்டணியில் வெளியான மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து, மீண்டும் தளபதி67 படத்திற்கு இருவரும் இணைந்துள்ளனர். இதனால் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.
தளபதி67 படம் 100 சதவீதம் லோகேஷ் படமாக இருக்கும் என்றும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் இந்நிலையில், தளபதி67 பூஜையும் தற்போது நடைபெற்றள்ளது.
சம்பள விவரம்
தற்போது தனது முதல் படத்தின் சம்பளத்தை பற்றி ஓபன் ஆக கூறியுள்ளார் லோகேஷ் கனகராஜ். அதில் மாநகரம் படத்திற்கு ரூ. 5 லட்சம் வழங்கப்பட்டதாகவும் , டிடிஎஸ் போக ரூ. 4.50 லட்சம் கிடைத்தது என தெரிவித்துள்ளார்.
தனது விடாமுயற்சியினால் அப்போது லட்சத்தில் ஆரம்பித்து இப்பொது கோடியில் சம்பளம் வாங்குகிறார் லோகேஷ்.
தளபதி 67 படத்தின் வில்லன் இவர் தான்.. விஷால் கிடையாது! பூஜையில் கலந்துகொண்ட முன்னணி நடிகர்

துருக்கியுடன் உறவுகளை இந்தியா துண்டித்தால்... இந்தப் பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயரும் News Lankasri

பாதுகாப்பு அச்சுறுத்தல்... ஆயுதங்கள் வாங்கிக்குவிப்பதில் திடீர் ஆர்வம் காட்டும் ஆசிய நாடுகள் News Lankasri

Brain Teaser Maths: சிதறும் சிந்தனை கொண்டவரால் இப்புதிரை தீர்க்க முடியாது-உங்களுக்கு முடியுமா? Manithan
