வறுத்தெடுத்த நெட்டிசன்கள்.. போர்நிறுத்தம் பற்றிய பதிவை நீக்கிய சல்மான் கான்
நடிகர் சல்மான் கான் ஹிந்தி சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவர். படங்கள், டிவி நிகழ்ச்சிகள் என எப்போதும் பிசியாக நடித்து கோடிகளில் சம்பளம் வாங்கி குவிப்பவர் அவர்.
அவரது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என மத்திய அரசு அவருக்கு Y+ பாதுகாப்பு அளித்து வருகிறது.
சமீபத்தில் பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை குறிவைத்து ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. அதை தொடர்ந்து கடந்த சில தினங்களாக கடும் போர் நடந்து வந்தது.
சல்மான் பதிவு.. வறுத்தெடுத்த நெட்டிசன்கள்
நேற்று இரவு முதல் இரண்டு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டு சண்டையை நிறுத்தி இருக்கும் நிலையில் சல்மான் இன்ஸ்டாவில் "Thank God for the ceasefire" என சல்மான் ட்விட்டர் தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
ஆபரேஷன் சிந்தூர் நடந்தபோது எதுவும் பேசாத சல்மான் கான் தற்போது போர் நிறுத்தத்திற்கு மட்டும் பதிவிட்டு இருப்பதை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
அதனால் தற்போது தனது பதிவை சல்மான் கான் நீக்கிவிட்டார்.
