சல்மான் கான் சொன்ன ஒரு வார்த்தை.. பூரிப்பில் நடிகை சமந்தா
பாலிவுட் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவர் சல்மான் கான். அவரது படங்கள் வசூல் சாதனை படைப்பது மட்டுமின்றி அவர் டிவியில் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் ஷோவுக்கும் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது.
தற்போது சல்மான் கான் தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் காட்பாதர் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கிறார். மோகன்ராஜா அந்த படத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில் தற்போது சல்மான் கான் தன்னை சமீபத்தில் கவர்ந்த பாடல் எது என வெளிப்படையாக கூறி இருக்கிறார்.

சமந்தா டான்ஸ் ஆடிய ஊ அண்டவா பாடல் தான் என அவர் பாடியே காட்டி இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அந்த வீடியோவை சமந்தாவே பார்த்து ட்விட்டரில் பகிர்ந்து ஹார்டின் எமோஜிக்களை பதிலாக கொடுத்து இருக்கிறார்.
♥️♥️♥️ https://t.co/UzkF0PVspl
— Samantha (@Samanthaprabhu2) June 26, 2022
3 கிரகங்களின் அரிய சேர்க்கையால் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்! Manithan