சல்மான் கானின் வீட்டுக்கு வாடகைக்கு போறீங்களா.. மாத வாடகை எவ்ளோ தெரியுமா?
பாலிவுட் சினிமாவின் வசூல் கிங்காக வலம் வருகிறார் சல்மான் கான். திரைப்படங்கள் மட்டுமின்றி விளம்பரங்கள், பிக் பாஸ் ஷோ போன்றவை மூலமாக மிகப்பெரிய தொகையை அவர் வருடம்தோறும் சம்பாதிக்கிறார். இந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் அவரும் ஒருவர்.
சல்மான் கானுக்கு மும்பையில் பல இடங்களில் வீடு, ப்ராப்பர்டி இருக்கிறது. அவருக்கு சொந்தமான அபார்ட்மெண்ட் ஒன்றை அவர் சமீபத்தில் வாடகைக்கு விட்டிருக்கிறார். அதற்கு மாத வாடகை 95 ஆயிரம் ரூபாய் பெறுகிறார் அவர். 759 சதுர அடி வீட்டிற்காக சில தினங்களுக்கு முன் போடப்பட்ட அக்ரிமெண்ட் விவரம் வெளியாகி இருக்கிறது.
அது மட்டுமின்றி மும்பையின் பாந்த்ரா பகுதியில் அவரது டுப்லெக்ஸ் வீட்டை மாதம் 8.25 லட்சம் ரூபாய்க்கு வாடகைக்கு விட்டிருக்கிறார் சல்மான் கான். இது தவிர மும்பையில் பல இடங்களில் சல்மானுக்கு சொந்தாமாக வீடுகள் இருக்கிறது.
இத்தனை வீடுகள் இருந்தாலும் சல்மான் கான் ஒரு சின்ன 1BHK வீட்டில் தான் வசித்து வருகிறாராம். அது பற்றி பேசிய பிரபல நடிகர் மகேஷ் மஞ்ரேக்கர் "நான் எப்போது போனாலும் சல்மான் கான் எப்போதும் அவரது வீட்டின் சோபாவில் தான் படுத்திருப்பார். பெரிய அளவில் ஜெயித்திருக்கும் அவர் வாழ்வது என்னவோ மிடில் க்ளாஸ் வாழ்க்கை தான்" என அவர் கூறியிருக்கிறார்.
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri