59 வயதிலும் உடலை இப்படி வைத்திருக்கும் சல்மான் கான்.. தினமும் என்ன சாப்பிடுகிறார் தெரியுமா?
நடிகர் சல்மான் கான் ஹிந்தி சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவர். அவர் படங்களை தாண்டி பிக் பாஸ் ஷோ மூலமாகவும் அதிகம் சம்பாதித்து வருகிறார்.
சல்மான் கானுக்கு தற்போது 59 வயது ஆகிறது. அவர் இந்த வயதிலும் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

என்ன சாப்பிடுகிறார்
சல்மான் கான் உடலை இப்படி வைத்திருக்க என்ன தான் சாப்பிடுகிறார் என அவரது ட்ரெயினர் ராகேஷ் முன்பு ஒரு பேட்டியில் கூறி இருந்தார்.
அவர் தினமும் 5 முறை சாப்பிடும் முறையை தான் கடைபிடித்து வருகிறாராம். அதுவும் வீட்டில் சமைத்த உணவு மட்டும் தான்.
காலையில் முட்டை, பழங்கள் மற்றும் கஞ்சி சாப்பிடுவார். மதியம் மீன் அல்லது சிக்கன். கொஞ்சம் rice அதிகம் காய்கறிகள் தான் சாப்பிடுவார் என ட்ரெயினர் தெரிவித்து இருக்கிறார்.
ஒர்கவுட்
சல்மான் வாரம் ஆறு நாட்கள் உடற்பயிற்சி செய்பவர். HIIT என்னும் முறையில் இடைவெளி இல்லாமல் தொடர்ந்து அவர் ஒர்கவுட் செய்வார். அதுவும் ஏசி இல்லாமல் தான் ஒர்கவுட் செய்வார்.
இடைவிடாமல் எல்லா ஒர்கவுட்டையும் 45 நிமிடம் முதல் ஒரு மணி நேரத்திற்குள் செய்து முடித்துவிடுவார் எனவும் ட்ரெயினர் கூறி இருக்கிறார்.
