2 நாள் ஏறிய நடிகர் சல்மான் கானின் சிக்கந்தர் பட பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்.. முழு விவரம்
சிக்கந்தர் படம்
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஹிந்தியில் தயாரான படம் சிக்கந்தர்.
சல்மான் கான் மற்றும் ராஷ்மிகா மந்தனா முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள இப்படம் கடந்த மார்ச் 30ம் தேதி ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியாகி இருந்தது.
நாயகன், நாயகி தாண்டி காஜல் அகர்வால், சுனில் ஷெட்டி மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோரும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பாக்ஸ் ஆபிஸ்
சல்மானின் சிக்கந்தர் படம் முதல் நாளில் ரூ. 26 கோடி வசூலித்திருந்தது, தற்போது 2வது நாளில் படம் ரூ. 29 கோடி வரை வசூல் சாதனை செய்துள்ளது.
முதல் நாளை விட படத்தின் கலெக்ஷன் 2ம் நாள் உயர்ந்துள்ளதால் வரும் நாட்களில் கண்டிப்பாக படத்தின் வசூல் உயரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.