பிக் பாஸ் சம்பளத்தை பல மடங்கு உயர்த்திய சல்மான் கான்! ஒரு வாரத்திற்கு இத்தனை கோடியா
சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களுக்கு மிக அதிக அளவு ரசிகர்கள் இருக்கிறார்கள். அதற்காகவே போட்டிபோட்டுக்கொட்னு பல சேனல்கள் எக்கச்சக்க நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அதுவும் பிக் பாஸ் நிகழ்ச்சி என்றால் அதற்க்கு கிடைக்கும் ரெஸ்பான்ஸுக்கு மற்ற நிகழ்ச்சிகள் ஈடு கொடுக்க முடிவதில்லை.
ஹிந்தியில் கடந்த 15 வருடங்களாக பிக் பாஸ் நடந்து வரும் நிலையில் விரைவில் 16ம் சீசன் தொடங்க இருக்கிறது. சல்மான் கான் தான் ஹிந்தியில் தொகுத்து வழங்கி வருகிறார்.
இவ்வளவு சம்பளமா
நடிகர் சல்மான் கான் கடந்த சீசனுக்கு சுமார் 350 கோடி சம்பளமாக பெற்றார் என சொல்லப்பட்டது. ஒரு எபிசோடுக்கு 15 கோடி என அவர் சம்பளம் வாங்கினார்.
திரைப்படங்களில் நடிப்பதை விட இதன் மூலமாக அவர் மிக அதிகம் சம்பாதிக்கிறார் என்கிற பேச்சும் எழுந்தது.
இந்நிலையில் தற்போது 16ம் சீசனை தொகுத்து வழங்க சல்மான் இன்னும் மூன்று மடங்கு சம்பளம் கேட்கிறாராம். அது பற்றி பாலிவுட் மீடியாக்களில் செய்தி வெளியாகி இருக்கிறது. அப்படி இல்லை என்றால் ஷோவில் இருந்து விலகுவதாகவும் அவர் நிகழ்ச்சி தயாரிப்பாளர்களிடம் சொல்லிவிட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.