பல இடங்களில் படுதோல்வியடைந்த டைகர் 3.. ஆனாலும் இத்தனை கோடி வசூலா
சல்மான் கான்
சல்மான் கானுக்கு என்ன ஆனதோ தெரியவில்லை அவர் நடிப்பில் சமீபகாலமாக வெளிவரும் படங்கள் எதுவும் வெற்றியடையவில்லை.
தமிழில் மாபெரும் வெற்றியடைந்த வீரம் படத்தை கூட ஹிந்தியில் ரீமேக் செய்து நடித்தார். ஆனால், இதுதானா வீரம் படத்தின் ரீமேக் என தமிழ் ரசிகர்கள் அனைவரும் கேள்வி எழுப்பும் அளவிற்கு அப்படம் இருந்தது.
அப்படத்தின் தோல்வியை தொடர்ந்து சல்மான் கான் ஹீரோவாக நடித்து தீபாவளிக்கு வெளிவந்த டைகர் 3 படமும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை.
படுதோல்வியடைந்த டைகர் 3
டைகர் மற்றும் டைகர் 2 ஆகிய திரைப்படம் வெற்றியடைந்த நிலையில், அப்படத்தின் மூன்றாம் பாகமாக டைகர் 3 வெளிவந்தது.
கண்டிப்பாக இப்படம் மிகப்பெரிய வெற்றியடையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர்கள் எதிர்பார்த்தது நடக்கவில்லை.
இந்நிலையில், இதுவரை உலக அளவில் டைகர் 3 திரைப்படம் ரூ. 400 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. அப்படி இருந்தும் கூட பல இடங்களில் நஷ்டத்தை சந்தித்து படுதோல்வியடைந்துள்ளது.

இதை படிக்கும்போது நான் உயிருடன் இருக்கமாட்டேன்., சுவிட்சர்லாந்தில் பிரித்தானிய தாயின் துயரமான முடிவு News Lankasri

நான் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தது.. உதயநிதி காய்ச்சலே வந்து படுத்துக்கொண்டார் - இபிஎஸ் IBC Tamilnadu
