ரீமேக் ஆகும் அஜித்தின் சூப்பர்ஹிட் திரைப்படம்.. மீண்டும் இவர் தான் ஹீரோவா? அதிர்ச்சியில் ரசிகர்கள்
அஜித்
அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இவர் நடிப்பில் தற்போது விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு அசர்பைஜானில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் திரிஷா, அர்ஜுன், ஆரவ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அஜித் நடிப்பில் வெளிவந்த மாபெரும் வெற்றியடைந்த திரைப்படங்களில் ஒன்று என்னை அறிந்தால். கடந்த 2015ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தை கவுதம் மேனன் இயக்கியிருந்தார்.
இப்படத்தில் அஜித்துக்கு நிகராக பேசப்பட்ட கதாபாத்திரம் அருண் விஜய் நடித்த விக்டர் கதாபாத்திரம் தான்.
ரீமேக்
இந்நிலையில், என்னை அறிந்தால் படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய போகிறார்களாம். இப்படத்தில் சல்மான் கான் ஹீரோவாக நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே அஜித்தின் வீரம் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் சல்மான் கான் தான் நடித்திருந்தார். அப்படத்தை பார்த்த அஜித் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர்.
தற்போது மீண்டும் அஜித்துடைய படத்தின் ஹிந்தி ரீமேக்கில் சல்மான் கான் நடிக்கப்போவதாக வெளிவந்துள்ள செய்து பலருக்கும் ஷாக் கொடுத்துள்ளது.

சிங்கிள் பசங்க: தமிழின் பெருமை பற்றி அதிரும் தொணியில் பேசிய ராவணன்! வியப்பில் ஆழ்ந்த அரங்கம் Manithan

அவசர சிகிச்சைப்பிரிவில் தீ... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எட்டு நோயாளிகள் பலி News Lankasri

ஒரு நாள் கூத்து காட்டும் போட்டியாளர்.. இதுக்கு மேல தாங்கமாட்டாரு- திவாகரனை ஓரங்கட்டிய பிரபலம் Manithan
