திருமணத்திற்கு அழைக்காவிட்டாலும் தனது முன்னாள் காதலிக்கு திருமண வாழ்த்து சொன்ன சல்மான் கான் !

salman salman khan katrina kaif tiger 3
By Jeeva Jan 31, 2022 02:40 PM GMT
Report

நடிகை கத்ரீனா கைப் நடிகர் விக்கி கெளஷலை கடந்த மாதம் 9 ஆம் தேதி காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

பிரமாண்டமாக ராஜஸ்தான் கோட்டையில் நடந்த இவர்களின் திருமணத்தில் பாலிவுட் திரையுலகை சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் கத்ரீனா கைப் சக நடிகரும் தனது முன்னாள் காதலருமான நடிகர் சல்மான் கானையோ அல்லது அவரது குடும்பத்தினரையோ திருமணத்திற்கு அழைக்கவில்லை.

கத்ரீனா கைப் பாலிவுட்டில் நிலைத்து நிற்க காரணமாக இருந்த சல்மான் கானை திருமணத்திற்கு அழைக்காதது விமர்சனத்திற்கு உள்ளானது. மேலும் சல்மான் கானும் அவர்களின் திருமணத்திற்கு வாழ்த்து தெரிவிக்காமல் இருந்தார்.

இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 15 இறுதிச்சுற்று சமீபத்தில் நடந்தது இதில் நடிகை ராக்கி சாவந்த்தும், ரூபினா திலக்கும் நடிகை கத்ரீனா கைஃப்பின் பாடலுக்கு நடனம் ஆடினர்.

அதன்பின் சல்மான் கான் கேமராவை பார்த்து 'கத்ரீனா திருமண வாழ்த்துக்கள்' என்று கூறி வாழ்த்தினார். 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US