மேடையில் பீஸ்ட் பட நடிகையுடன் நடிகர் சல்மான் கான் செய்த விஷயம் ! இணையத்தில் பரவி வரும் வீடியோ..
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் பீஸ்ட்.
இப்படத்தில் இருந்து ஏற்கனவே வெளியாகியுள்ள அரபிக் குத்து பாடல் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று பெரியளவில் ஹிட்டாகியுள்ளது.
அதன்படி அப்பாடல் வெறும் 12 நாட்களில் 100 மில்லியன் பார்வைகளை குவித்து சாதனை படைத்துள்ளது.
இதனிடையே இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ள நடிகை பூஜா ஹெக்டே இவர் தமிழில் இதற்கு முன் முகமூடி திரைப்படத்தில் நடித்திருந்தார். அப்படத்தை தொடர்ந்து பல வருடங்களுக்கு பிறகு தமிழ் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சமீபத்தில் மும்பையில் நடந்த பாலிவுட் விழா ஒன்றில் நடிகை பூஜா ஹெக்டே நடிகர் சல்மான் கானுடன் இணைந்து நடனமாடியுள்ளார்.
அப்போது சல்மான் கான் அவரின் படத்தில் வருவது போல நடனமாட முயற்சித்துள்ளார். ஆனால் பூஜா ஹெக்டேவின் அணிந்திருந்த உடையின் காரணமாக அவரால் அந்த ஸ்டேப்பை போடமுடியவில்லை.
தற்போது அந்த வீடியோ தான் ரசிகர்களிடையே பரவி வருகிறது.
When #SalmanKhan Tries to make the impossible Dance Step possible with #PoojaHegde ♡ Da-DanggTheTourReloaded@BeingSalmanKhan @hegdepooja pic.twitter.com/O67PXz9ZyS
— Salman Sajid Bhai Jaan (@SalmanSajidBha6) February 26, 2022