பாலிவுட் நடிகர்களின் செக்யூரிட்டி.. கோடிக்கணக்கில் சம்பளம்! எவ்வளவு என கேட்டால் அதிர்ச்சி நிச்சயம்
நடிகர்கள் பொது இடங்களுக்கு வந்தால் அவர்கள் உடன் செல்பி எடுக்க ஒரு பெரிய கூட்டமே குவிந்துவிடும். அப்படி அவர்களிடம் இருந்து காப்பாற்ற நடிகர்கள் சொந்தமாக பாதுகாவலர்கள் அல்லது பவுன்சர்களை வைத்திருப்பார்கள்.
ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகர் நடிகைகள் எல்லோரும் இப்படி சொந்தமாக பாதுகாவலர்கள் வைத்திருக்கின்றனர். அந்த வேலை செய்பவர்கள் கோடிக்கணக்கில் சம்பளமும் வாங்குகிறார்கள்.
கோடிகளில் சம்பளம்
சல்மான் கான் பாதுகாவலராக பல ஆண்டுகள் இருக்கும் குர்மீத் சிங் ஷேரா வருடத்திற்க்கு 2 கோடிக்கும் மேல் சம்பளமாக வாங்குகிறார். அவர் சமீபத்தில் ஒன்றரை கோடி கொடுத்து Range Rover சொகுசு கார் வாங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஷாருக் கான் பாதுகாவலராக இருக்கும் ரவி சிங் என்பவருக்கு சுமார் 3 கோடி ரூபாய் வரை சம்பளமாக தரப்படுகிறது. இப்படி முன்னணி நடிகர்களின் செக்யூரிட்டிகளுக்கு கோடிகளில் சம்பளம் தரப்பட்டு வருவது நிச்சயம் எல்லோருக்கும் ஆச்சர்யம் அளிக்கும் விஷயம் தான்.

நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
