கொரோனா நேரத்தில் இத்தனை கோடிக்கு விலைபோனதா சல்மான் கானின் படம்- ஷாக்கான ரசிகர்கள்
கொரோனாவின் தாக்கம் எல்லா துறையையும் முடக்கிவிட்டது. இந்த பிரச்சனைகள் முடிந்து மீண்டும் எப்போது பழைய நிலைமை வரும் என ஏங்காத மக்களே இல்லை.
சினிமா துறை கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது. தமிழில் கொரோனாவிற்கு பின் திரையரங்கில் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் பாலிவுட்டில் சல்மான் கான் படத்திற்காக பெரிய வியாபாரம் நடந்துள்ளது. அவரது நடிப்பில் அடுத்து ராதே என்கிற படம் வெளியாக இருக்கிறது.
அந்த படத்தின் திரையரங்கம், சாட்டிலைட், டிஜிட்டல், ஆடியோ என மொத்த உரிமையையும் சேர்த்து ரூ. 230 கோடிக்கு ஜீ ஸ்டூடியோஸிற்கு விற்றுள்ளார் சல்மான் கான்.
கொரோனா நேரத்தில் இத்தனை கோடிக்கு விலைபோனது ரசிகர்களால் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.