வணங்கான் படத்திற்கு புது இசையமைப்பாளர்! அப்போ ஜீ.வி.பிரகாஷ்..?
இயக்குனர் பாலாவின் அடுத்த படமான வணங்கான் படத்தில் முதலில் சூர்யா தான் ஹீரோவாக நடிக்க தொடங்கினார். ஆனால் முதல் செடியூல் ஷூட்டிங்கில் இருவருக்கும் சண்டை வந்ததால் படப்பிடிப்பில் இருந்து வெளியேறிய சூர்யா அதன் பிறகும் படத்தில் இருந்தே விலகிக்கொண்டார்.
அதற்கு பிறகு தான் அருண் விஜய்யை ஹீரோவாக வைத்து வணங்கான் படத்தை பாலா இயக்கி இருக்கிறார்.
புது இசையமைப்பாளர்
இந்த படத்தில் ஜீ.வி.பிரகாஷ் தான் இசையமைப்பாளர் என முன்பே அறிவிக்கப்பட்டது தான். ஆனால் தற்போது பின்னணி இசைக்கு மட்டும் இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் ஒப்பந்தம் ஆகி இருப்பதாக அறிவிப்பு வந்திருக்கிறது.
ஷூட்டிங் முடிந்து பல மாதங்கள் ஆகும் நிலையில் தற்போது புது இசையமைப்பாளர் இணைந்திருப்பதாக தெரிகிறது. ஜீ.வி.பிரகாஷ் பாடல்கள் மட்டும் படத்தில் இடம்பெறும் என சாம்.சி.எஸ் தெரிவித்து இருக்கிறார்.
Happy to Score The BGM For #vanangaan ???
— ??? ? ? (@SamCSmusic) August 16, 2024
First time with my favourite director @IyakkunarBala Sir??
Songs by nanban @gvprakash
Tnkq #bala sir and @sureshkamatchi sir for the opportunity ?
Looking forward@arunvijayno1 @roshiniprakash_ @iam_ridhaa@thondankani… pic.twitter.com/1zpdxO6KWR